நாசா அதிகாரியின் கருத்துக்கு சீனா சீற்றம்
9 view
பீஜிங்கின் விண்வெளித்திட்டமானது ‘ஒரு இராணுவ விண்வெளித் திட்டம்’ என அமெரிக்க விண்வெளி முகவரகத்தின் நிர்வாகி பில் நெல்சன் கூறியதைத் தொடர்ந்து, சீனா கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாசா உண்மைகளை புறக்கணித்து சீனாவை கொச்சைப்படுத்துவது இது முதல் முறை அல்ல என்று கூறினார். சில அமெரிக்க அதிகாரிகள், ஏனைய நாடுகளின் இயல்பான மற்றும் நியாயமான விண்வெளிச் செயற்பாடுகளை தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அவதூறு செய்து வருவதாகவும், இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் அவர் கூறினார். அமெரிக்க விண்வெளித் துறையின் இயக்குநரான நெல்சன், அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் இருண்ட வரலாறு, விண்வெளி குப்பைகளை உருவாக்குவதில் அமெரிக்கா ஆற்றிய பங்கு, விண்வெளியில் ஆயுதப் போட்டிகளைத் தூண்டுதல் மற்றும் உலகளாவிய ரீதியில் மூலோபய ஸ்திரத்தன்மைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றும்…
The post நாசா அதிகாரியின் கருத்துக்கு சீனா சீற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாசா அதிகாரியின் கருத்துக்கு சீனா சீற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
