ஜனாதிபதியுடன் பிரதமரும் பதவி விலக வேண்டும்; போராட்டக்குழு நிபந்தனை!

6 view
ஜனாதிபதி நாளை பதவி விலகும் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்குழுவினால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் போராட்டக்களத்தின் பிரதிநிதிகளுக்கும், சகல அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், இந்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றிருந்தது. இதன்போது, போராட்டக்காரர்களால், போராட்டத்தின் செயற்பாட்டு திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகளும் நிபந்தனையும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி உடனடியாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை நியமித்து, மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அரசாங்கம் ஒரு வருடத்துக்கு மட்டுமே ஆட்சியில் இருக்க முடியும். மேலும் மக்களின் குறுங்கால அடிப்படை பிரச்சினைகளுக்கு 6 மாதங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ராஜபக்ஷவினர் அல்லது ராஜபக்ஷவினரை பாதுகாக்க முனைவோருக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்படக்கூடாது. தற்போது நடைமுறையில் இருக்கும் அரசாங்கம் உடனடியாக பதவி…
The post ஜனாதிபதியுடன் பிரதமரும் பதவி விலக வேண்டும்; போராட்டக்குழு நிபந்தனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース