தென்னிலங்கை போராட்டக்காரர்களால் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அவமானம்
7 view
இலங்கையில் ஊழல் ஆட்சி செய்தமைக்காக ராஜபக்ஷர்களை விரட்டும் மக்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ள நிலையில், ஆட்சியாளர்களும் அகற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் என தம்மை அடையாளப்படுத்தும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் நாட்டின் அதியுச்ச அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் செயலகம் மற்றும் மாளிகை என்பன முற்றுகையிடப்பட்டுள்ளன. மறுபுறத்தில் பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகையும் மக்களின் வசம் உள்ளன. சர்வதேச நாடுகளின் தலைவர்கள், ராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்திக்கும் மற்றும் நாட்டின் முக்கிய தீர்மானங்களை கலந்தாலோசிக்கும் இடங்களாக இவை உள்ளன. எனினும் நாட்டின் முக்கிய இடங்களை கைப்பற்றியுள்ள மக்கள், அது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமான இல்லம் என்ற எண்ணத்தில் பல்வேறு அநியாங்களை செய்து வருகின்றனர். அங்குள்ள மிகவும் விலை உயர்ந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். ஒரு சிலர் பொருட்களை களவாடி வருகின்றனர். இது நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாளிகையாகும். இது ராஜபக்ஷர்களின் குடும்ப சொத்து இல்லை என்பதை மக்கள் மறந்து விட்டார்கள். தற்போது சேதப்படுத்தும் பொருட்களையும் உடைக்கும் உடமைகளையும்…
The post தென்னிலங்கை போராட்டக்காரர்களால் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அவமானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்னிலங்கை போராட்டக்காரர்களால் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அவமானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
