சீன மக்களின் தனிநபர் தரவுகள் திருடப்பட்டு இணையத்தில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்
36 view
சீனா,ஜுலை 05 சீன மக்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் சில தனி நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இவ்வாறு திருடப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 7 இலட்சத்து 50 ஆயிரம் சீன மக்களின் பெயர்கள், தொலைபேசி இலக்கங்கள், அடையாள அட்டை இலக்கங்கள், பிறந்த திகதி உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்கள் மாதிரிக்காக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த தனிநபர் தகவல்கள் 2 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், முக அடையாள தரவுகள் மற்றும் மக்கள் சனத்தொகை தொடர்பான தகவல்கள் ஆகியனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சீன மக்களின் தனிநபர் தரவுகள் திருடப்பட்டு இணையத்தில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீன மக்களின் தனிநபர் தரவுகள் திருடப்பட்டு இணையத்தில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
