யாழில் துணியை வயிற்றுக்குள் வைத்துத் தைத்த வைத்தியர் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
37 view
பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தைத்த விவகாரத்தில், சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்களின் கவனக்குறைவினாலேயே மரணம் நிகழ்ந்ததாக பருத்தித்துறை நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நெல்லியடி பொலிசாருக்கு, பருத்தித்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நெல்லியடியிலுள்ள ரூபின்ஸ் வைத்தியசாலையில், மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையை தொடர்ந்து, கடந்த ஜனவரி 11ஆம் திகதி மூதாட்டியொருவர் உயிரிழந்திருந்தார். கரவெட்டி, யார்க்கரு பகுதியை சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (60) என்ற பெண், கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது கர்ப்பப்பையை அகற்றுமாறு வைத்திய ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, கடந்த டிசம்பர் 10ஆம் திகதி நெல்லியடி, முடக்காடு பகுதியிலுள்ள ரூபின்ஸ் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு சென்றிருந்தார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மகப்பேற்றியல் வைத்திய நிபுணர் ஒருவர் தலைமையிலான குழுவினர் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டனர். அந்த சத்திரசிகிச்சையில் பங்கேற்ற பிற வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரிபவர்களே. யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்…
The post யாழில் துணியை வயிற்றுக்குள் வைத்துத் தைத்த வைத்தியர் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் துணியை வயிற்றுக்குள் வைத்துத் தைத்த வைத்தியர் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
