வடகிழக்கில் நீதி கேட்கும் குரல்களும் தெற்கு சமூகத்தின் காதுகளுக்கு எட்டவேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல்
37 view
தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும். எதிர்கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குருநாகல் ஐஓசி பெட்றோல் நிலையத்தில் இராணுவ அதிகாரி பொதுமகன் மீது நடத்திய மிலேச்சதனமான தாக்குதல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவும் வேண்டும். இராணுவ அதிகாரியின் செயற்பாட்டை அமைதியுடன் அனுமதித்து நின்ற ஏனைய இராணுவத்தினரும் பொலிசாரும் தண்டனைக்குரியவர்களே. இதே இராணுவம் வடகிழக்கில் நிகழ்த்திய கொடுமைகளுக்கு நீதி கேட்கும் குரலும் தெற்கின் சமூகத்தின் காதுகளுக்கும் எட்டவேண்டும், உணர வேண்டும். அது இதுவரை உணரப்படவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் குடும்பமாக வீதிக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அரசு நாட்டின்…
The post வடகிழக்கில் நீதி கேட்கும் குரல்களும் தெற்கு சமூகத்தின் காதுகளுக்கு எட்டவேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடகிழக்கில் நீதி கேட்கும் குரல்களும் தெற்கு சமூகத்தின் காதுகளுக்கு எட்டவேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
