பெற்ரோல் தாகம் – நிலாந்தன்.
17 view
நாடு தெருவில் எரிபொருள் வரிசையில் நிற்கிறது. இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் இத்துணை நீண்ட எரிபொருள் வரிசைகள் முன்னெப்பொழுதும் காணப்படவில்லை.நாடு ஏன் இப்படி பெட்ரோல் மீது தாகமுடையதாக மாறியது?அதிகமாக மோட்டார் இயந்திர வாகனங்களில் தங்கியிருப்பதுதான் காரணமா? நாங்கள் அதிகமதிகம் இயந்திரங்களில் தங்கி வாழ்கின்றோமா? தமிழ் மக்களைப் பொறுத்தவரை பொருட்களுக்காக வரிசைகளில் காத்திருப்பது ஒரு புதிய அனுபவமல்ல.ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற மகா இடப்பெயர்வோடு ஒப்பிடுகையில் இந்த வரிசைகள் யாவும் ஒரு பொருட்டேய ல்ல. மிகக் குறுகிய காலத்தில், தப்பிச் செல்ல இருந்த ஒரே பிரதான சாலை ஊடாக, கைதடிப் பாலம், நாவற்குழிப் பாலம் ஆகிய இரண்டு பாலங்களைக் கடந்து தென்மராட்சிப் போக வேண்டியிருந்தது. அப்பொழுது முழு வலிகாமமும் தெருவில் நின்றது. அந்தக் காட்சியானது பருந்துப் பார்வைக்கு ஒரு காயப்பட்ட மலைப்பாம்பு ஊர்ந்து ஊர்ந்து நகர்வதைப் போன்று இருந்தது.கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மேல் அந்த இடப்பெயர்வு வரிசை யாழ்ப்பாணத்திலிருந்து…
The post பெற்ரோல் தாகம் – நிலாந்தன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெற்ரோல் தாகம் – நிலாந்தன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
