பாடசாலைகளுக்கு செல்லமாட்டோம் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிற்கு அறிவிப்பு!

29 view
திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்லமுடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிற்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, மதிப்பிற்கு உரித்தான அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவருக்கும்.திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்லாது கஸ்டத்தை வெளிப்படுத்துவோம்.இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது நாம் எவருமே இதுவரை சந்திக்காதது. இதனை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அனுபவிக்கின்றனர் என்பது உண்மை . இந்த வாழ்வாதார போராட்ட சூழ்நிலையில் மாணவரின் கல்விச் செயற்பாடுகளில் அக்கறை கொள்ளாத அரசாங்கம் பாடசாலைகளை நடாத்த முனைகின்றது. இது வேடிக்கையானது பெற்றோரோடு மாணவரும் அவர்களோடு அதிபர்கள், ஆதிரியர்கள் அனைவருமே இரவு பகலாக வீதிகளில் வரிசையில் நிற்கின்றனர். இவர்கள் வீதியில் நிற்க பாடசாலையை யாருக்காக நடாத்துவது.திங்கட்கிழமை பாடசாலை இயங்கும் முறைபற்றி அரசாங்கம் அறிவித்துள்ளது. நகர்ப்புற பாடசாலைகள் மூன்று நாட்கள் இயங்குமாம். கிராமப்புற பாடசாலைகள் முழுநாளும் இயங்குமாம். இது ஏற்புடையதா? கிராமப்புற பாடசாலைக்குச் செல்லும் பெருமளவான ஆசிரியர்கள்…
The post பாடசாலைகளுக்கு செல்லமாட்டோம் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிற்கு அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース