முல்லையில் மாணவிகள் துஷ்பிரயோகம்;ரவிகரன் கடும் கண்டனம்!
16 view
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைமாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான விடயத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அதேவேளை 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆளுமையற்ற நிர்வாகக் கட்டமைப்புகள் காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படக்கூடிய இவ்வாறான அருவருக்கத்தக்க செயற்பாடுகள் அதிகரித்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் ஆசிரியர், மாணவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக ஊடகங்களினூடாக அறியக்கூடியதாகவிருந்தது. குறிப்பாக அண்மைக்காலங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவருவதை ஊடகங்களூடாக அறிகின்றோம். இத்தகைய சம்பவங்கள் மிகவும் மோசமானது. இதனை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறாக பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரியவர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக எடுக்கப்படுகின்ற நடவடிக்கையானது, மீண்டும் ஒருதடவை இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறாது இருக்கின்ற வகையில் மிக இறுக்கமான நடவடிக்கையாக இருக்கவேண்டும். அதேவேளை…
The post முல்லையில் மாணவிகள் துஷ்பிரயோகம்;ரவிகரன் கடும் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லையில் மாணவிகள் துஷ்பிரயோகம்;ரவிகரன் கடும் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
