கிழக்கை மீட்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை! – மட்டு. மாநகர முதலவர்
14 view
அபிவிருத்திக்கென்றும் கிழக்கை மீட்கவென்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவிதமான செயற்பாடுகளும் நடைபெறவில்லை. செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் நாங்கள் அறியவில்லை என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுப்பங்கேணியில் மட்டக்களப்பு மாநகரசபையினால் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை இன்று திறந்துவைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய மாநகரசபை முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளாட். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாநகரசபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான எங்களது அணி பொறுப்பெடுத்தபின்பு மட்டக்களப்பு நகரத்தில் பெரியளவிலான அபிவிருத்திகளை எங்களால் முன்னெடுக்க முடிந்தது. எங்களது திட்டங்களை முன்மொழியும்போது வட்டார உறுப்பினர்களின் பிரேரணைகளை நாங்கள் கவனம் செலுத்துவதால்தான் எங்களுடைய திட்டங்கள் தெரிவு செய்யப்படுகின்றது. அந்த வகையில் கருவேப்பங்கேணி பகுதியில் ஒரு சந்தை உருவாக்கப்படவேண்டும், அதன் மூலமாக வீதியோர வியாபாரம் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எங்களது முன்னாள் உறுப்பினர் கௌரவ தவராஜா ஐயா வேண்டுகோளிற்கிணங்க இந்த கட்டிடத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். இங்கு அபிவிருத்திக்கென்றும் கிழக்கை மீட்கவென்றும் மக்களால்…
The post கிழக்கை மீட்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை! – மட்டு. மாநகர முதலவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கை மீட்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை! – மட்டு. மாநகர முதலவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
