யாழில் இளைஞர் உயிரிழப்பு; மூவருக்கு விளக்கமறியல்!

4 view
யாழ் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மற்றும் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தி இருவருமே இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் ஜூலை 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உடுவில் செபமாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-24) என்பவரே உயிரிழந்தார். குறித்த நபரை எரிபொருள் நிலையத்தில் உள்ளவர்கள் தலைக்கவசத்தினால் தாக்கியுள்ளனர். அதனால் இளைஞனுக்கு வாய், மூக்கு வழியாக குருதி ஓடியுள்ளது. அங்கிருந்து வீடு சென்ற இளைஞன் மறுநாள் மதியம் நெஞ்சுவலி மற்றும் உடல் சோர்வு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.எனினும் இரண்டு நாள்களின் பின் அவர் சிகிச்சை பயனின்றி கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இந்நிலையில் இளைஞனின் சடலத்தின் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இடம்பெற்றது. பரிசோதனை…
The post யாழில் இளைஞர் உயிரிழப்பு; மூவருக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース