வாய்புகள் அமையாது அவற்றை அமைத்து கொள்ள வேண்டும்: துனித் டுவிட்

5 view
கொழும்பு,ஜுன் 25 சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. எனினும், போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியிருந்தது. இந்த போட்டித் தொடரில் இலங்கை அணியில் துனித் வெல்லாலகே என்ற இளம் வீரர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். அவர் இந்த தொடரில் விளையாடி 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதற்கமைய, போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை வெல்லாலகே பெற்றுள்ளார். இந்நிலையில், துனித் வெல்லாலகே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். அதில், ´வாய்ப்புகள் அமையாது, அவற்றை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்´ என பதிவிட்டுள்ளார். Opportunities don´t happen, you have to create them ❤️
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース