எரிபொருள் வரிசையில் மருத்துவ அதிகாரி மீது தாக்குதல்! சுகாதாரத்துறை கண்டன அறிக்கை
13 view
“சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் கண்டிக்கின்றோம்” என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் நா.சரவணபவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. மக்கள் அனைவருமே எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை நாங்கள் அவதானித்து வருகின்றோம். இந்த நேரத்தில் உயிர் காக்கும் மிக அதி உயர் அத்தியாவசிய சேவையான சுகாதார சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் தமது கடமைகளை தொடர்ந்து மேற்கொண்டபடி எரிபொருளையும் தமது குடும்பங்களுக்கான அத்தியாவசியப்பொருட்களையும் பெற்றுக்கொள்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அவர்கள் தமது கடமை நிலையங்களான மருத்துவமனைகளுக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளுக்கும் ஏனைய பணிமனைகளுக்கும் கடமைக்கு வருவதற்கான தமது தனிப்பட்ட வாகனுங்களுக்கான எரிபொருளைப் பெற முடியாது…
The post எரிபொருள் வரிசையில் மருத்துவ அதிகாரி மீது தாக்குதல்! சுகாதாரத்துறை கண்டன அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருள் வரிசையில் மருத்துவ அதிகாரி மீது தாக்குதல்! சுகாதாரத்துறை கண்டன அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
