எந்த நாடும் தப்ப முடியாது! எச்சரிக்கை
33 view
கடுமையான உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும். அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மன் தலைநகர் பெர்லினில், பணக்கார மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் (António Guterres) பேசியபோது, பருவநிலை மாற்றம், கொரோனா ஆகியவை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பட்டினி பிரச்சினையை உருவாக்கின. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். உக்ரைன் போர், அந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளில் உரம், எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடுகிறார்கள். அந்த நாடுகளில் அறுவடை பாதிக்கப்படும். அதனால், இந்த ஆண்டு பல நாடுகளில் பஞ்சம் அறிவிக்கப்படும் அபாயம் உள்ளது. அடுத்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமடையும். உணவு கிடைக்காத பிரச்சினை, உலக அளவில் உணவு தட்டுப்பாடாக மாறும். அது உலக அளவில்…
The post எந்த நாடும் தப்ப முடியாது! எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எந்த நாடும் தப்ப முடியாது! எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
