பாடசாலைக்கு செல்ல முடியாது: இலங்கை ஆசிரியர் சங்கம்
36 view
கொழும்பு,ஜுன் 25 தமக்கு முறையான அறிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசிடம், அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்தோம். அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. நாளுக்குநாள் நெருக்கடிகள் அதிகரித்தே செல்கின்றன. பொதுமக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முரண்பாடுகள் உருவாக ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில் எமது போக்குவரத்திற்கான பொறிமுறை உருவாக்கப்படாவிட்டால் திங்கள் முதல் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாது என்பதனை கல்வி அமைச்சிற்கும் பெற்றோருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம். இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியபோது வடமாகாணத்தில் விசேடமாக தூர இடங்களுக்கு பணிக்குச் செல்லும் ஆசிரியர்களின் நிலை குறித்து பேசியபோது, அவர்கள் பாடசாலை அதிபருக்கு முறைப்படி அறிவிக்குமாறும் அதனை ஏற்றுக்கொள்ளாத அதிபர்கள் தொடர்பாக தமக்கு தகவல் தருமாறு…
The post பாடசாலைக்கு செல்ல முடியாது: இலங்கை ஆசிரியர் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலைக்கு செல்ல முடியாது: இலங்கை ஆசிரியர் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
