…
26 view
மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தப்படும் அட்டை மூலம் மாத்திரமே எரிவாயு, எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்– மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்- (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பிரதேச ரீதியாக எதிர்வரும் புதன்கிழமை முதல் குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் அட்டை ஊடாக மட்டுமே குறித்த பொருட்களை கொள்வனவு செய்யமுடியம் என மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார் மாவட் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் அத்தியவசிய திணைக்கள பணிப்பாளர்கள் இராணுவத்தினர், பொலிசார் பிரதேச செயலாளர்கள் அழைத்து இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 ஆயிரத்து 720 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக வேளாண்மை பயிரப்பட்டுள்ளது இந்த வேளாண்மை அறுவடை எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 திகதி முடிவடைய இருக்கின்றது. …
The post … appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post … appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
