நாடாளுமன்ற உறுப்பினரானார் தம்மிக பெரேரா! வர்த்தமானி வெளியானது
6 view
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமினால் கையளிக்கப்பட்டது. நாட்டில் வர்த்தக வலையமைப்பு ஒன்றின் தலைவராக செயற்படும் தம்மிக்க பெரேரா, அப்பதவியில் இருந்து விலக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற செய்திகள்
The post நாடாளுமன்ற உறுப்பினரானார் தம்மிக பெரேரா! வர்த்தமானி வெளியானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்ற உறுப்பினரானார் தம்மிக பெரேரா! வர்த்தமானி வெளியானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
