கல்முனை பிரதி முதல்வர் – குவைத் தூதுவர் சந்திப்பு
43 view
கொழும்பு,ஸ்ரீ, ஜுன் 09 கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்கள், குவைத் தூதுவர் ஹலாஃப் பு தாய்ர் அவர்களை கொழும்பிலுள்ள தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். நாட்டில் நிலவும் சமகாலப் பிரச்சினைகள், கல்முனைப் பிரதேசத்திலுள்ள தேவைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், தனது பிராந்தியத்துக்கு உதவிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தன்னால் இயலுமான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக தூதுவர் இதன்போது உறுதியளித்தார். அத்துடன், குடுவில் குடியேற்றத் திட்டத்தில் 40 வீடுகளை அமைப்பதற்கு உதவி கோரப்பட்டபோது, குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியில் அதனை நிர்மாணித்து தருவதாக இதன்போது உறுதியளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும் குவைத், பஹ்ரைன் நாடுகளின் முன்னாள் தூதுவருமான தனது தந்தை ஏ.ஆர். மன்சூர் பெயரில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 900 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஞாபகார்த்த மண்டபம், கல்முனை முஹையத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட பல அபிவிருத்திப் பணிகளுக்கு குவைத்…
The post கல்முனை பிரதி முதல்வர் – குவைத் தூதுவர் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை பிரதி முதல்வர் – குவைத் தூதுவர் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
