உணவுக்காக இலங்கையில் வெடிக்கப் போகும் கலவரம்! – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
28 view
உணவுக்காக இலங்கையில் இன்னமும் பெரிதாக கலவரம் ஏற்படவில்லை. ஆனால், அதற்கான சூழல் விரைவாக ஏற்பட்டு வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பெட்ரோல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றுக்காக மக்கள் மோதிக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். வரிசைகளில் நான் முந்தி, நீ முந்தி என்றும், பெட்ரோல் தீர்ந்துவிட்டால், பெட்ரோல் நிலைய ஊழியர்களைத் தாக்குவது என்றும், பெட்ரோல் கொண்டுவரும் லொறிகளை நிறுத்தி குழப்பம் விளைவிப்பது என்றும், சமையல் வாயு கலன்களை கொண்டுவரும் லொறியை நிறுத்தி, கலன்களை அடாத்தாக தூக்கிச் செல்வது என்றும் கலவரங்கள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன. பெட்ரோல் ஒழுங்காக தரவில்லை என்று சொல்லி பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொலிஸார் மோதல் பரவலாக ஏற்படுகிறது. முதல் மோதலில் பொலிஸ் சுட்டதில் ஒருவர் இறந்தார். பலர் காயமடைந்தனர். இதனால் பொலிஸ் மீது கடும் விமர்சனம் எழுந்தது. பொதுவாக உலகில் நல்ல பெயர் இல்லாத ஸ்ரீலங்கா பொலிஸாரும்,…
The post உணவுக்காக இலங்கையில் வெடிக்கப் போகும் கலவரம்! – விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவுக்காக இலங்கையில் வெடிக்கப் போகும் கலவரம்! – விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
