பாகிஸ்தானில் மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு
15 view
பாகிஸ்தான், ஜுன் 09 பாகிஸ்தானில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு மின்சார பற்றாக்குறை கடுமையாகயுள்ளது. இதனால் மின்சாரத்தை சேமிக்கவும், அதன் பயன்பாட்டை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் பாகிஸ்தானில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இரவு 8.30 மணிக்கு அனைத்து மார்க்கெட்டுகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் அனைத்து மாகாண முதலமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தடை உத்தரவுகளை கடுமையாக அமுல்படுத்த இஸ்லாமாபாத் பொலிஸார் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது…
The post பாகிஸ்தானில் மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாகிஸ்தானில் மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
