ஈஸ்டர் தாக்குதல் – சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதி

69 view
உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கண்டியைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையின் கீழ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த 2019 ம் ஆண்டு கண்டியை சேர்ந்த முகம்மது பாறுக் முகம்மது ஹிலாம் என்பவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவரை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். என் .அப்துல்லாஹ் இன்று(08)பத்து லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணை மற்றும் வெளிநாடு செல்லத்தடை என்ற நிபந்தனையில் பிணையில் விடுவித்துள்ளார். சஹ்ரானின் குழுவை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்டியில் வைத்து முகம்மது பாறுக் முகம்மது ஹிலாம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்திலும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் கண்டி மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதேவேளை…
The post ஈஸ்டர் தாக்குதல் – சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース