யாழ்.பல்கலையில் வணிக பீடமும் தொழிற்துறை மன்றமும் இணைவு
55 view
யாழ்ப்பாணம்,ஜுன் 08 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமும், யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலம் இணைந்து கொண்டுள்ளன. இவ் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று 08 ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு முகாமைத்துவக்கற்கைகள், வணிக பீட சபா மண்டபத்தில் இடம்பெற்றது.இவ் உடன்படிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றம், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்கள், விரிவுரையளர்கள் போன்றவர்களுக்கும் பல்வேறு வழிகளில் நன்மையினை ஏற்படுத்தும். இப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் வாயிலாக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமானது யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் நிலைபேறான அபிவிருத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பினை வழங்க முடியும். யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் அங்கத்தவர்களுக்கு தேவையான பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், போன்றனவற்றுக்கு வளவாளர்களாக முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் தொழிற்படுதலுடன் கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்களை வகுப்பதில் உதவுதல். குறுகியகால டிப்ளோமா, மற்றும் சான்றிதழ்…
The post யாழ்.பல்கலையில் வணிக பீடமும் தொழிற்துறை மன்றமும் இணைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.பல்கலையில் வணிக பீடமும் தொழிற்துறை மன்றமும் இணைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
