இந்திய துணைத்தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்!
5 view
இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் சமமாகவே வழங்கப்படுவதாகவும் எந்த பிரிவினையையும் இந்திய அரசாங்கம் பார்ப்பதில்லையெனவும் இலங்கைக்காக இந்திய துணைத்தூதுவர் எம்.நடராஜ் தெரிவித்தார். இந்தியாவிற்கான யாழ் துணைத்தூதவர் எம்.நடராஜ் நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் செய்ததுடன் இன்று உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு விஜயம் செய்தார். விஜயம் செய்த துணைத்தூதுவரை சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடி தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். இதன்போது சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய துணைத்தூதுவர் நிறுவகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினார். பல மில்லியன் ரூபா செலவில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் அமைக்கப்படவுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இதன்போது தற்போதைய விலைவாசி உயர்வு காரணமாக குறித்த ஒன்றுகூடல் மண்டபத்தினை அமைப்பதற்கான செலவுகள் அதிகமாகவுள்ளதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையினை விட…
The post இந்திய துணைத்தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய துணைத்தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
