புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு
24 view
யாழ்ப்பாணம், ஜூன் 6: வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை இன்று திறந்துவைக்கப்பட்டது. வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக சுமார் 16 இலட்சம் நிதி வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த திட்டம் நடைறைப்படுத்தப்பட்டு இன்றையதினம் சம்பிரதாய பூர்வதாக தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்தியால் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இதன்போது தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி கருத்துரைக்கையில் – தற்போதைய நாட்டு சூழலும் பொருளாதார நெருக்கடியும் மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதில் மருத்துவம் சார் தேவைகளும் அதிகரித்துள்ளமையால் மக்கள் பெரும் பாதிப்புகளை நாளாந்தம் எதிர்கொண்டு வரும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு குட்பட்ட பகுதியான புங்குடுதிவில் குறித்த வைத்தியசாலையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்த நிலையில் அதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக 16 இலட்சம் ரூபா நிதி இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இன்றையதினம்…
The post புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
