மட்டு கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ணமிசன் பாடசாலை அதிபர்,ஆசிரியர் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்!(படங்கள் இணைப்பு)
5 view
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ணமிசன் பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பிலும் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக இன்றைய தினம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. இராம கிருஸ்ணமிசன் பாடசாலையின் உடைமைகள் கடந்த சில நாட்கள் சேதமாக்கப்பட்டுவருவதுடன் அதிபர் ஆசிரியர்களுக்கு சிலர் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாட்டை கண்டித்தும் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சாதாரண தர பரீட்சைக்காக பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டு இன்று மீண்டும் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை பாடசாலைக்குவந்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தமக்கு தீர்வு வழங்க கோரி இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். பாடசாலைக்குள் இருந்த சீசிரிவி கமராக்களை உடைத்துள்ளதுடன் பாடசாலை அதிபரின் காரியாலயம்,நடன ஆசிரியர் காரியாலயம் மற்றும் பாடசாலையின் தளபாடங்களை உடைத்துள்ளதுடன் சில மாணவர்களும் பெற்றோரும் தமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் சுகுணதாஸ் ரவிசங்கர் தெரிவித்தார். பாடசாலையில்…
The post மட்டு கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ணமிசன் பாடசாலை அதிபர்,ஆசிரியர் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ணமிசன் பாடசாலை அதிபர்,ஆசிரியர் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
