மட்டுப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் வாகனங்களுக்கான எரிபொருள்!

5 view
பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகளின் வாகனங்களுக்கான எரிபொருள் மட்டுப்படுத்தப்பட வேண்டுமன பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பொலிஸ் திணைக்களத்தின் பிரதானிகள் மற்றும் பிராந்திய கணக்காளர்களுக்கு சுற்று நிரூபம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 11ம் திகதி பொலிஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் 15 வீதத்தினால் குறைக்கப்பட வேண்டுமென்று பொலிஸ் மா அதிபர் அறிவித்திருந்தார். இந்நிலையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பணப்பெறுமதி வீழ்ச்சி காரணமாக தற்போதைக்கு பொலிஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் 20 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக நிதிவளம் இல்லாத நிலையிலும், நிர்வாக நடவடிக்கைகளுக்கான தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட ​வேண்டியதன் காரணமாகவும் பொலிஸ் அதிகாரிகளுக்கான எரிபொருள் விநியோகம் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிற செய்திகள் Facebook : சமூகம் தமிழ் நியூஸ் Twitter: சமூகம் ட்விட்டர் Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம் YouTube : சமூகம் யு டியூப்
The post மட்டுப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் வாகனங்களுக்கான எரிபொருள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース