சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள்!
14 view
கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய் இலகுவாகப் பரவும் என்றும் ஒரு தடவை தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது கொடிய நோயல்ல என்றும் 6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பரசிற்றமோல் போன்றவற்றைக் குடிக்கக் கொடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிற செய்திகள் Facebook : சமூகம் தமிழ் நியூஸ் Twitter: சமூகம் ட்விட்டர் Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம் YouTube : சமூகம் யு டியூப்
The post சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
