கேடலூனியா கிராண்ட் பிரிக்ஸ்: பேபியோ குவார்டராரோ சம்பியன்!
14 view
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கேடலூனியா கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டராரோ, சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம் நடப்பு ஆண்டு 21 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது. அந்த வகையில் ஆண்டின் ஒன்பதாவது சுற்றான கேடலூனியா கிராண்ட் பிரிக்ஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பார்சிலோனா- கேடலூனியா சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் 111.8 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 25 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர். இதில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டராரோ, பந்தய தூரத்தை 40 நிமிடங்கள், 29.360 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார். இதையடுத்து, டுகார்டி அணியின் ஜோர்ஜ் மார்டின், 6.473 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார் இவரையடுத்து, டுகார்டி அணியின் ஜோஹன் சர்கோ, 8.385…
The post கேடலூனியா கிராண்ட் பிரிக்ஸ்: பேபியோ குவார்டராரோ சம்பியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கேடலூனியா கிராண்ட் பிரிக்ஸ்: பேபியோ குவார்டராரோ சம்பியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
