தமிழக முதல்வர் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்! தர்மலிங்கம் சுரேஸ்
21 view
தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஒட்டு மொத்த பாரதத்தின் நலனை பார்க்கின்றார்களே தவிர இலங்கையின் தொப்புள்கொடி உறவான தமிழர்களின் நலனைபார்த்து செயற்படவில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். தமிழர் விடுதலைப்போராட்டத்தில் முதல் தற்கொலை போராளியான தியாகி பொன். சிவகுமாரனின் 48வது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பு வவுணதீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் , அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவர் இ.சத்தியசீலன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர் இதன்போது பொன்.சிவகுமாரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சுரேஸ், பொன்.சிவகுமாரனின் தியாகத்தினை கண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் எழுச்சிகொண்டார்கள்.கல்வி தரப்படுத்தலில் ஏற்பட்ட முரண்பாடுகளை தமிழர்கள் தமது உரிமைக்கான போராட்டத்தினை…
The post தமிழக முதல்வர் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்! தர்மலிங்கம் சுரேஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழக முதல்வர் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்! தர்மலிங்கம் சுரேஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
