எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய பிரதமர் தேவையில்லை! அனுர சீற்றம்
13 view
சிறுபோக பயிர் செய்கைக்கு உரிய நேரத்தில் இரசாயன பசளைகளை வழங்காது தம்பட்டம் அடிக்கும் கோட்டா – ரணில் இரட்டையர், எதிர்காலத்தில் ஏற்பட போகும் உணவு நெருக்கடிக்கு வழங்கப் போகும் தீர்வு என்ன என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். குறிப்பாக எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் என்ற கடும் அச்சத்திலும் உணர்விலும் பொதுமக்கள் இருக்கின்றனர். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி ஜனாதிபதி கமதொழில் தொடர்பாக எடுத்த தவறான முடிவுகள் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்படும் நிலைமையை நாடு தற்போது எதிர்நோக்கி வருகிறது. நெருக்கடிக்கு சரியான தீர்வை தேடி, உணவு உற்பத்திக்காக அரசாங்கம் வேலைத்திட்டத்தை முன்வைக்க தவறியுள்ளது. இதனால், அரசாங்கத்தில் இருக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீண்டும் வழமை போல் பொறுப்பற்ற வகையில் பல்வேறு கதைகளை கூறி…
The post எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய பிரதமர் தேவையில்லை! அனுர சீற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய பிரதமர் தேவையில்லை! அனுர சீற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
