இலங்கைக்கு தொடர்ந்தும் அத்தியாவசியப் பொருட்கள்; தமிழக முதல்வர் அறிவிப்பு!

4 view
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினை நேற்று காலை சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக அரசாங்கத்தின் முதலமைச்சர் ஒருவரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கைக்கும் இந்தியாவின் மாநிலங்களுக்கும் இடையிலான அதிக தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தின்கீழ் இலங்கையின் உயர்ஸ்தானிகர், தமிழக முதலமைச்சரை மரியாதை நிமித்தம் சந்தித்ததாக உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை நிர்வகிப்பதற்காக, இலங்கைக்கு வழங்கிய இரண்டு பில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளுக்காக முதலமைச்சர் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், இலங்கையின் நிலைமை குறித்து தாம் அக்கறை கொள்வதாகவும், இதன் காரணமாகவே அத்தியாவசியப் பொருட்களின் முதல் கப்பலை உடனடியாக அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் கூறினார். இரண்டாவது…
The post இலங்கைக்கு தொடர்ந்தும் அத்தியாவசியப் பொருட்கள்; தமிழக முதல்வர் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース