யாழ் கொழும்புத்துறை குடும்பத்தலைவர் கொலை வழக்கில் திருப்புமுனை;தூக்குதண்டனையும் தள்ளுபடி!
40 view
யாழ் கொழும்புத்துறை குடும்பத்தலைவர் கொலை வழக்கில் எதிரிகள் இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது . கொலைக் குற்றத் தீர்ப்பையும் தூக்குத் தண்டனையையும் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது . கடந்த 2010 ஆம் ஆண்டு மாசி மாதம் 3 ம் திகதி இரவு கொழும்புத்துறையைச் சேர்ந்த கடற்தொழிலாளியான மார்க்கண்டு சிவராசா என்பவர் தனது வீட்டுக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் . இந்நிலையில் சடலத்தில் குருதி தோய்ந்த காயங்கள் காணப்பட்ட நிலையில் புலன் விசாரணை நடாத்திய யாழ்ப்பாண குற்றப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இறந்தவரின் மனைவியையும் , சக கடற்தொழிலாளியான நண்பர் ஒருவரையும் கைது செய்தனர் . அதனை அடுத்து இறந்தவரின் வீட்டின் பின்புறத்தில் இருந்து கொலைக்கு உபயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட கத்தி , மண்வெட்டி என்பன கைப்பற்றப்பட்டன . இந்நிலையில் யாழ் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற சுருக்கமுறையற்ற விசாரணையின் பின் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு வழக்கு பாரப்படுத்தப்பட்டது யாழ்ப்பாண…
The post யாழ் கொழும்புத்துறை குடும்பத்தலைவர் கொலை வழக்கில் திருப்புமுனை;தூக்குதண்டனையும் தள்ளுபடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் கொழும்புத்துறை குடும்பத்தலைவர் கொலை வழக்கில் திருப்புமுனை;தூக்குதண்டனையும் தள்ளுபடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
