மும்பையில் கொரோனா 4-வது அலைக்கு வாய்ப்பு: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
12 view
மும்பை,ஜுன் 04 மராட்டியத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மும்பையில் நேற்று ஒரே நாளில் 763 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது கடந்த பிப்ரவரி 4-ந் தேதிக்கு பிறகு அதிக பாதிப்பாகும். இதன் மூலம் மும்பையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை. கொரோனா அதிகரிப்பை அடுத்து மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் நேற்று அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் உத்தரவு ஒன்றை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கொரோனா 4-வது அலை வருகிற ஜூலை மாதம் ஏற்படலாம் என கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் கணித்து உள்ளனர். அவர்களது முந்தைய எச்சரிக்கை பலித்து உள்ளது. எனவே தற்போதைய அவர்களது இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சமீப நாட்களாக கொரோனா…
The post மும்பையில் கொரோனா 4-வது அலைக்கு வாய்ப்பு: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மும்பையில் கொரோனா 4-வது அலைக்கு வாய்ப்பு: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
