செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பு மக்கள் எதிர்நோக்கவுள்ள ஆபத்து!

15 view
இலங்கை உணவு பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பில் உணவு முற்றாக தீர்ந்துவிடும் என கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கொழும்பு நகரிலுள்ள 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கையின் உணவு நெருக்கடி அவசரகால நிலைக்கு சென்றுள்ளதால் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தால் இயக்கப்படும் உணவு வங்கியிடம் நேற்றைய தினம் அவசர உணவு உதவியை கோரியுள்ளது. இந்த நிலையிலேயே எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பில் உணவு முற்றாக தீர்ந்துவிடும் என கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பிலுள்ள மக்கள் தங்கள் வீட்டுத்தோட்டங்களில் அத்தியாவசிய உணவுப்பயிர்களை பயிரிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கான விவசாய திட்டத்தை கொழும்பு மாநகர சபை ஆரம்பிக்கவுள்ளதாக கூறினார். மேலும்…
The post செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பு மக்கள் எதிர்நோக்கவுள்ள ஆபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース