எரிவாயு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

16 view
ஐந்து மாதங்களாக சமையல் எரிவாயு இன்றி தாம் பரிதவிப்பதாகவும், எனவே, தங்களுக்கு கூடியவிரைவில் சமையல் எரிவாயுவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் நோர்வூட், புளியாவத்தை கடைவீதியில் வசிக்கும் மக்கள், இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் குதித்தனர். ஹட்டன் – சாஞ்சிமலை பிரதான வீதியை மறித்து, வீதி நடுவே ‘வெற்று’ சமையல் எரிவாயு சிலிண்டர்களை அடுக்கி வைத்து, பதாகைகளை தாங்கியும், கோஷங்களை எழுப்பியும் மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்தது.  ஹட்டனில் இருந்து சாஞ்சிமலை, பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு வந்த மக்கள் நீண்ட நேரம் வாகங்களில் காத்திருந்தனர். பலர் மாற்று வழிகளைத்தேடி திரும்பி சென்றனர். பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். ” எங்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சமையல் எரிவாயு விநியோகிக்கப்படவில்லை. மண்ணெண்ணையும் பகிரப்படவில்லை. நகரப்பகுதி என்பதால் விறகடுப்பு  பயன்படுத்துவதிலும் ஆயிரம் தடைகள். இந்நகரில் லிற்றோ சமையல் எரிவாயு முகவர்கள் மூவர் இருக்கின்றனர். அவர்களுக்கு குறித்த…
The post எரிவாயு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース