அமைதிப் போராட்டங்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட செயல்! – இளம் ஊடகவியலாளர் சங்கம்

15 view
கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அமைதிப் போராட்டங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்ட செயல் என்றும் இதற்கு பொலிஸும் அரசாங்கமும் ஆதரவளித்தது என்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று தெரிவித்துள்ளது. காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக இளம் ஊடகவியலாளர் சங்கத்திற்கு இன்றுஅழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சட்டத்தரணி நுவான் போபகே மற்றும் சட்டத்தரணி டி.எம்.திஸாநாயக்க ஆகியோருடன் சங்கத்தின் உறுப்பினர்களான தரிந்து ஜயவர்தன, ஷாலிகா விமலசேன, எம்.எப்.எம்.பசீர் ஆகியோர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகினர். இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சார்பில் முதலில் சாட்சியமளித்த தரிந்து ஜயவர்தன, அரசாங்கம் வேண்டுமென்றே பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். அத்தோடு, போராட்டங்களை நேரடியாக ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலி முகத்திடலில்…
The post அமைதிப் போராட்டங்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட செயல்! – இளம் ஊடகவியலாளர் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース