முதற் தர சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ள துமிந்த சில்வா
15 view
கொழும்பு, ஜுன் 03 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் துமிந்த சில்வா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் அவர், ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதி செய்தது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியளித்த மன்னிப்பை உயர் நீதிமன்றம் இடைநிறுத்தி, இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த நிலையில், அவரைக் கைது செய்து சிறையிலடைக்குமாறு சிஐடி பணிப்பாளருக்கு கடந்த மே 31 ஆம் திகதி கட்டளையுமிட்டது. அதன்படியே நேற்று முன்தினம் ( 01) மாலை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சென்ற சிஐடி சிறப்புக் குழு ஆர். துமிந்த சில்வாவை கைது செய்திருந்ததுடன், இரவோடிரவாக அவரை சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைத்தது. கடந்த மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகளைத் தொடர்ந்து…
The post முதற் தர சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ள துமிந்த சில்வா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதற் தர சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ள துமிந்த சில்வா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
