உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக ஸெலென்ஸ்கி தகவல்!
14 view
உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதிவொலோடிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். லக்ஸம்பர்க் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், ‘நாங்கள் எப்படி இருக்கிறோமோ, அப்படியே இருக்க விரும்புகிறோம்’ என்பதுதான் லக்ஸம்பர்கின் தேசிய கோஷமாகும். தற்போது நாங்கள் ரஷ்யாவுடன் போரிட்டு வருவதும் அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து சுமார் 100 நாள்கள் ஆகின்றன. இந்த 100 நாட்களில் நாங்கள் 30,000 வீரர்களை இழந்துள்ளோம். இருந்தாலும், இந்தப் போரை தொடர்ந்து நடத்த ரஷ்யா விரும்புகிறது. காரணம், ஒரு தனி நபர் (ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்) நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே இருக்கவேண்டும் என்பதை விரும்பவில்லை. தற்போது உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட 1.25 இலட்சம் கிலோ…
The post உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக ஸெலென்ஸ்கி தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக ஸெலென்ஸ்கி தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
