கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது
16 view
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்தை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள் இடம்பெறும். இதையடுத்து எதிர்வரும் 12 திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமயில் வெஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்படும். கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் திருவிழா திருப்பலிகள் திருவிழா தினமான இம்மாதம் 13 ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும், 5 மணிக்கும் சிங்கள மொழியிலும், 6 மணிக்கு ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்படும். திருவிழா பாடல் திருப்பலிகள் அன்றைய தினம் காலை 8 மணிக்கு தமிழ் மொழியிலும், காலை 10 மணிக்கு சிங்கள மொழியிலும், நண்பகல் 12 மணிக்கு ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இதன் பின்னர் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு…
The post கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
