நீண்டகாலமாக புனரமைக்கப்படாத வெல்லாவெளி – வக்கி எல்லை பிரதான வீதி!
5 view
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத வெல்லாவெளி – வக்கி எல்லை பிரதான வீதிகள் செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் போக்குவரத்துச்செய்வதில் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்ட குறித்த வீதியை நீண்டகாலமாக புனரமைத்துதருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த நிலையிலும் அதனை புனரமைக்க யாரும் நடவடிக்கையெடுக்காத நிலையில் போரதீவுப்பற்று பிரதேச சபையினால் குறித்த வீதியை தற்காலிகமாக புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லா வெளியிலிருந்து அம்பாறைக்குச் செல்லும் வக்கிஎல்லை (சுனுனு)பிரதான வீதியானது நீண்ட நாட்களாக இந்த வீதியின் ஊடாக கல் மண் ஏற்றிச் செல்கின்றமையினால் வீதியானது குண்டும் குழியுமாக உடைந்த நிலையில் காணப்படுகின்றது. இவ் வீதியினை புனரமைத்துதருமாறு நீண்டகாலமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட அரசியல்வாதிகளிடம் முறையிட்ட போதும் யாரும் கவனிக்காத நிலையிலும் பல தடவைகள் ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தியும் இதற்கான தீர்வினை யாரும் வழங்காத நிலையியே காணப்படுவதாக பிரதேச…
The post நீண்டகாலமாக புனரமைக்கப்படாத வெல்லாவெளி – வக்கி எல்லை பிரதான வீதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீண்டகாலமாக புனரமைக்கப்படாத வெல்லாவெளி – வக்கி எல்லை பிரதான வீதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
