இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொடுத்த மட்டக்களப்பு வீரர்கள்!

10 view
சர்வதேச சிலம்ப சம்மேளத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் மெய்வல்லுனர் போட்டியில் சிலம்பக்கலையின் பேராசான் கணபதிப்பிள்ளையின் மாணவரும் அகத்தியம் பாரம்பரிய கலைச் சங்கத்தின் தலைவரும், சர்வதேச சிலம்ப சம்மேளத்தின் இலங்கைகுரிய தலைவருமான அமரசிங்கம் குமணன் இரண்டு தங்கப்பதக்கத்தையும் அவரது மாணவர்கள் இரண்டு தங்கப்பதக்கங்களையும் வென்று மொத்தமாக இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். சர்வதேச சிலம்ப சம்மேளத்தினால் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் சர்வதேச சிலம்ப மெய்வல்லுனர் போட்டியின் 2021ம் ஆண்டிற்குரிய போட்டியானது கனடா நாட்டின் ஏற்பாட்டில் 2021 நவம்பர் 14 முதல் 28 வரை நடைபெற இருந்த போதிலும் உலக நாடுகளின் அசாதாரண நிலைமையால் பிற்போடப்பட்டு 17 டிசம்பர் இணையவழி மூலம் இடம்பெற்றிருந்தது. இந்தியா, இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர், வட அமெரிக்கா, டுபாய் மற்றும் கட்டார் ஆகிய 8 நாடுகளை சேர்ந்த சுமார் 400 வீரர்களும், 200 வீராங்கனைகளும், பங்குபற்றியிருந்த இப்போட்டியின் முடிவுகள் அண்மையில் வெளியாகிய நிலையில்…
The post இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொடுத்த மட்டக்களப்பு வீரர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース