போக்குவரத்து நெரிசல் – நாளாந்தம் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம்!
14 view
கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் விநியோக முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் குமாரகே இதனை தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் காரணமாக எரிபொருள் விரயம், மற்றும் உழைக்கும் மக்கள் வேலை செய்யும் வீதிகளை மறிப்பதானது, ஒரு நாடு என்ற ரீதியில் தாங்க முடியாத பொருளாதார இழப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வாகனங்கள் நாடாளுமன்ற வீதி, கண்டி வீதி, காலி வீதி, ஹைலெவல் வீதி, ஹொரண வீதி, தெமட்டகொட – வெல்லம்பிட்டிய வீதி, நாவல – நாரஹேன்பிட்டி வீதி, ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதி, கீரிமண்டல மாவத்தை, ஹெக்கிட்டா – மட்டக்குளிய வீதி, லோ லெவல் ஆகியவற்றின் ஊடாக கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் காலி வீதி, கண்டி வீதி, நீர்கொழும்பு வீதி மற்றும் ஹைலெவல்…
The post போக்குவரத்து நெரிசல் – நாளாந்தம் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போக்குவரத்து நெரிசல் – நாளாந்தம் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
