விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்க கோப் குழு பரிந்துரை
4 view
கொழும்ப,மே 25 நாடு பொருளாதார நெருக்கடிக்குச் செல்லும் வரை தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. 2018-2019 நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் இலங்கை வங்கியின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கோப் குழு இன்று (25) கூடியது. இதன்போதே, இவ்வாறு தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், வரையறுக்கப்பட்ட டப்ளியு.எம்.மெண்டிஸ் நிறுவனம் ஒரே சொத்தினை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் அடமானம் வைத்துள்ளதா? என்பது குறித்து கோப் குழு ஆராய்ந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக அதிகளவு செலுத்தப்படாத கடன் நிலுவைகளைக் கொண்ட சில நிறுவனங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது, டபிள்யூ.எம்.மென்டிஸ் லிமிடெட் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் ஒரே மாதிரியான சொத்துக்களை அடகு…
The post விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்க கோப் குழு பரிந்துரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்க கோப் குழு பரிந்துரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
