மட்டக்களப்பில் சாதாரண பரீட்சைக்கு தோற்ற விடாமல் தடுக்கப்பட்ட மாணவர்கள்!
14 view
மட்டக்களப்பில் உள்ள சில பாடசாலைகளில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமையினை மீறும் செயற்பாடு என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்.உதயரூபன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர், நாட்டில் பல சிரமங்களுக்கு மத்தியில் கா.பொ.சாதாரண தர பரீட்சை நடைபெற்றுவருகின்றது.பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் பரீட்சையினை சவாலாக எடுத்து தோற்றியுள்ளனர். கடந்த காலத்தில் கற்றல் செயற்பாடுகளில் மாணவர்கள் பெரும்சிரமங்களை எதிர்கொண்ட நிலையிலும் போக்குவரத்து பிரச்சினைகள் உட்பட பல்வேறு நெருக்கடிகளை மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள நிலையிலும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள சில பாடசாலைகளில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்படாமல் மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு தடுக்கப்பட்டமை இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கருதுகின்றது.இது…
The post மட்டக்களப்பில் சாதாரண பரீட்சைக்கு தோற்ற விடாமல் தடுக்கப்பட்ட மாணவர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் சாதாரண பரீட்சைக்கு தோற்ற விடாமல் தடுக்கப்பட்ட மாணவர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
