புலம் பெயர் தமிழர்களிடம் பிரதமர் ரணில் கோரிய உதவியை ஏற்றுக் கொள்ள முடியாது – சந்திரகாந்தன்
15 view
இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளை மறந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர்களிடம் உதவியை எதிர்பார்த்து நேசக்கரம் நீட்டியுள்ளதை ஒரு போதும் புலம் பெயர் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடக அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளர். குறித்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது டொலர் இன்மையால் நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் இரு மடங்காகியுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் வெயிலிலும் மழையிலும் இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இலங்கையின் நிலை இன்னும் மோசமடையலாம் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்துக்கொள்ள புலம்பெயர் தமிழர்களிடம்…
The post புலம் பெயர் தமிழர்களிடம் பிரதமர் ரணில் கோரிய உதவியை ஏற்றுக் கொள்ள முடியாது – சந்திரகாந்தன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலம் பெயர் தமிழர்களிடம் பிரதமர் ரணில் கோரிய உதவியை ஏற்றுக் கொள்ள முடியாது – சந்திரகாந்தன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
