ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம்! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம்

28 view
இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் தமிழக அரசிடம் இருந்து ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பதாக கோரியுள்ளது. சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவீனங்களின் அடிப்படையில் தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினை வெளியேற்ற தமிழ்நாடு அரசு, இந்த வேளையில் வலியுறுத்த வேண்டும் என்பதனையும் எதிர்பார்ப்பதாக தீர்மானம் கோரியுள்ளது. கடந்த மே 21-22 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அசரவையில் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி அவர்களால முன்மொழியபட்டு, அரசவையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழுவிபரம், தமிழ்நாட்டுக்கும்…
The post ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம்! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース