யாழில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
42 view
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் யாழ். நகரில் சிறிது நேரம் பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என நம்பி யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இன்று காலை முதல் காத்திருந்த பொதுமக்கள், நீண்ட நேரமாகியும் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படாததால் விரக்தியடைந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறிது நேரம் காங்கேசன்துறை வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டதுடன், குழப்பமான நிலை உருவானது. இதனையடுத்து அங்கு வருகை தந்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் வீதியை மறித்துப் போராடிய பொதுமக்களை சமரசப்படுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இன்று காலை முதல் யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலை முன்பாக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்நிலையில் அங்கு வந்திருந்த பொலிஸார் இங்கு விநியோகம் இடம்பெறாது எனவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குச் செல்லுமாறும் தெரிவித்தனர். இதனையடுத்து யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு…
The post யாழில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
