யாழிற்கு 75 ஆயிரம் இந்திய நிவாரண பொதிகள் ஒதுக்கீடு

14 view
இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கென 75 ஆயிரத்து 343 பொதிகளும் 18 ஆயிரத்து 836 பால்மா பைக்கற்றுகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதன்படி மாவட்ட அரசாங்க அதிபர்களை இணையவழியில் சந்திப்பு நடத்திய உயர் அதிகாரிகள் மாவட்டத்தில் வறுமையில் உள்ள மக்களின் புள்ளிவிபரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், மாவட்டத்திற்கான உலர் உணவு பொதிகளின் எண்ணிக்கை பால்மா பைக்கற்றுகளின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானித்துள்ளார்கள். இதில் குறிப்பாக வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான நிவாரண பணிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் அல்லது 5 அகவைக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பால்மா பவுடர் வழங்கப்படவுள்ளது. அத்துடன் ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில்…
The post யாழிற்கு 75 ஆயிரம் இந்திய நிவாரண பொதிகள் ஒதுக்கீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース