இது ராஜபக்ச அரசாங்கம் அல்ல! – பந்துல தெரிவிப்பு
15 view
தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் ராஜபக்ச அரசாங்கம் அல்ல என அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கமைவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் சுயாதீன குழுக்களை அரசில் இணையுமாறு வற்புறுத்திய நிலையில் அவர்கள் அவ்வாறு செயற்படாத வேளையில் அமைச்சர்கள் தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இந்த சவாலை சிலர் எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பான கலந்துரையாடல்களை இவ்வாரத்திற்குள் நிறைவு செய்வதற்கும் , அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.…
The post இது ராஜபக்ச அரசாங்கம் அல்ல! – பந்துல தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இது ராஜபக்ச அரசாங்கம் அல்ல! – பந்துல தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
