முல்லைத்தீவில் மண்ணெண்ணெய் இல்லை; மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு!
13 view
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக நம்பியுள்ள மக்கள் தற்போது தொழிலுக்கு செல்வதற்கு மண்ணெண்ணெய் இல்லாததால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாக குற்றம் சுமத்தியுள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை முதல் கொக்குளாய் வரையான கடற்பரப்பில் 2000 மீன்பிடிப் படகுகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகத்திக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள போதும், சுமார் 18 நாட்களுக்கு மேலாக மண்ணெண்ணெய் கிடைக்காததன் காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தங்களுடைய வாழ்வாதார தொழிலுக்காக இந்த மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வந்தாலும், தற்போது மண்ணெண்ணெய் இல்லாததன் காரணமாக தொழிலை மேற்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக விலை கொடுத்து இரவு நேரங்களில் மண்ணெண்ணையை பெற்றுக் கொள்பவர்கள் சட்டவிரோதமாக 400 ரூபா வரையில் மண்ணெண்ணையை தற்போது விற்பனை செய்கின்றனர் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை விடவும் சுமார் 18 நாட்களாக மீனவர்களுக்கு…
The post முல்லைத்தீவில் மண்ணெண்ணெய் இல்லை; மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் மண்ணெண்ணெய் இல்லை; மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
